பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவ கவுடா சந்திப்பு


பிரதமர் மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவ கவுடா சந்திப்பு
x
தினத்தந்தி 30 Nov 2021 8:50 AM GMT (Updated: 30 Nov 2021 8:50 AM GMT)

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவகவுடா சந்தித்துப் பேசினார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவ கவுடா இன்று சந்தித்துப் பேசினார். பாராளுமன்றத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.  இந்த சந்திப்பு குறித்து தனது டுவிட்டரில்  பதிவிட்டுள்ள  பிரதமர் மோடி, பாராளுமன்றத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவை இன்று சந்தித்தேன். சந்திப்பு சிறப்பானதாக இருந்தது” என்று பதிவிட்டுள்ளார். பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது குறிப்பிடத்தக்கது. 

Next Story