“திருப்பதி பயணத்தை 10-15 நாட்கள் பக்தர்கள் தள்ளி வைக்க வேண்டும்” - தேவஸ்தானம் அறிவுறுத்தல்


“திருப்பதி பயணத்தை 10-15 நாட்கள் பக்தர்கள் தள்ளி வைக்க வேண்டும்” - தேவஸ்தானம் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 1 Dec 2021 8:06 AM GMT (Updated: 1 Dec 2021 8:06 AM GMT)

திருப்பதி பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று முன்பதிவு செய்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.

திருப்பதி, 

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் வழியில் மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண் சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மண் சரிவின் போது பாறை உருண்டு விழுந்ததில் 3 சாலைகள் சேதம் அடைந்துள்ளன. மண் சரிவு காரணமாக 2வது மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

பாறைகள் மற்றும் மரக்கிளைகளை அகற்றும்  பணியில் தற்போது தேவஸ்தான பொறியாளர்கள், வனத்துறை அதிகாரிகள் இணைந்து பணியாற்றி வருகின்றனர். காத்திருந்த வாகனங்களை இணைப்பு சாலை மூலம் முதலாவது பாதை வழியே திருமலைக்கு செல்ல  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சாலைகள் சேதம் அடைந்த பகுதியில் தேவஸ்தான அறங்காவல் குழு தலைவர் ஆய்வு செய்தார்.

இந்நிலையில் திருப்பதி பயணத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று முன்பதிவு செய்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் 10-15 நாட்களுக்கு பின் அதே டிக்கெட்டில் ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்றும், சாலை சீரமைப்பு பணி நடைபெறுவதால் திருப்பதிக்கு வருவதை தவிர்க்குமாறும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 




Next Story