இந்திய விமான நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டில் ரூ.19,564 கோடி இழப்பு - மத்திய அரசு தகவல்


இந்திய விமான நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டில் ரூ.19,564 கோடி இழப்பு -  மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 7 Dec 2021 3:44 PM IST (Updated: 7 Dec 2021 3:44 PM IST)
t-max-icont-min-icon

2020-21 ஆம் நிதியாண்டில் இந்திய விமான நிறுவனங்களுக்கு ரூ.19,564 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 25 முதல் மே 24 வரை உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மேலும் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் சரவதேச விமான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. கொரோனா தொற்று குறைந்ததையடுத்து தற்போது பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்திய விமான நிறுவனங்கள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே .சிங் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் 2020-21 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் முறையே ரூ.19,564 கோடி மற்றும் ரூ.5,116 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் சில விமான நிறுவனங்கள் தங்கள் நிலுவைத் தொகையை வழங்க தவறிவிட்டதாகவும், இந்திய விமான நிலைய ஆணையம் அதன் கடன் கொள்கையின்படி நிலுவைத் தொகையை திரும்பப் பெறுவதற்காக விமான நிறுவனங்களை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Next Story