மராட்டியத்தில் முதல் ஒமைக்ரான் நோயாளி குணமடைந்தார்
மராட்டியத்தில் முதல் ஒமைக்ரான் நோயாளி குணமடைந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை,
கொரோனா உருமாற்றம் அடைந்து ஒமைக்ரான் வைரசாக தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு பல்வேறு நாடுகளில் தடம் பதித்துள்ளது. இந்தியாவில் பரவ விடாமல் தடுக்க வெளிநாட்டு விமான பயணிகளிடம் கடும் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மராட்டியத்தில் தானே மாவட்டம் கல்யாண் பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 33 வயது பயணிக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது முதன் முறையாக கண்டறியப்பட்டது. அந்த பயணியை தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அந்த பயணி குணமடைந்ததால், அவர் நேற்று வீடு திரும்பினார். இதனால் மராட்டியத்தின் முதல் ஒமைக்ரான் நோயாளி குணமடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story