ஆந்திராவில் தனியார் பள்ளியில் 9 மாணவர்கள் உள்பட 15 பேருக்கு கொரோனா
ஆந்திராவில் தனியார் பள்ளியில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பள்ளி தற்காலிமாக மூடப்பட்டது.
ஐதராபாத்,
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9 மாணவர்கள் உள்பட 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பள்ளியில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள் உள்பட 190 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.
இதனையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில், பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது. கொரோனா பாதித்த மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story