ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் மேலும் ஒரு போலீஸ் உயிரிழப்பு


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 14 Dec 2021 11:09 AM IST (Updated: 14 Dec 2021 11:09 AM IST)
t-max-icont-min-icon

ஜூவன் என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஏற்கெனவே இரு போலீசார் உயிரிழந்தனர்.

ஜம்மு காஷ்மீர்,

ஸ்ரீநகரின் புறநகர் பகுதியாக பந்த் சவுக் அருகே உள்ள ஜூவன் என்ற இடத்தில் போலீசாரின் ரோந்து வாகனம் நேற்று மாலை சென்றது. அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள்  வாகனத்தை குறி வைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். இதில் அந்த வாகனத்தில இருந்த 14 போலீசார் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 14 பேரையும் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் 2 போலீசார் இறந்துவிட்டனர். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போலீஸ்காரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த போலீசாரின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு எந்த பயங்கரவாத அமைப்பும் உடனடியாக பொறுப்பு ஏற்கவில்லை. பயங்கரவாதிகளை தேடும் பணியை போலீசாரும், எல்லை பாதுகாப்பு படையினரும் மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story