கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு சரிவு
கர்நாடகத்தில் தற்போது 7,158 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐதராபாத்,
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 411 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடந்தது. இதில் புதிதாக 303 பேருக்கு பாதிப்பு உறுதியானது. நேற்று மேலும் 2 பேர் இறந்தனர். இதுவரை 30 லட்சத்து ஒரு ஆயிரத்து 554 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. 38 ஆயிரத்து 279 பேர் இறந்து உள்ளனர்.
அதே சமயம் நேற்று 322 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 29 லட்சத்து 56 ஆயிரத்து 88 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். 7 ஆயிரத்து 158 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பெங்களூரு நகரில் 197 பேர், மைசூருவில் 21 பேர், தட்சிண கன்னடாவில் 15 பேர், குடகில் 13 பேர் உள்பட 303 பேர் பாதிக்கப்பட்டனர்.
பெங்களூரு நகரில் மட்டும் 2 பேர் இறந்தனர். மற்ற 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. 2-வது நாளாக 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்ட தகவலை மாநில சுகாதார துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story