'பாலியல் பலாத்காரத்தை தவிர்க்க முடியாதபோது....’ - சட்டசபையில் எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு
பாலியல் பலாத்காரம் குறித்து சட்டசபையில் எம்.எல்.ஏ. சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபையில் நேற்று பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, சமீபத்தில் மாநிலத்தில் பெய்த மழை மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளம் குறித்து சட்டசபையில் கூடுதல் நேரம் விவாதிக்க வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் கோஷமிட்டனர்.
அவர்களை இருக்கையில் அமரும்படி சபாநாயகர் விஷ்வாஷ்வார் ஹெக்டே கார்கி அறிவுறுத்தினார். ஆனால், எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.
அப்போது பேசிய சபாநாயகர், மகிழ்ச்சியடையவும், அனைத்திற்கும் ஆம், ஆம் என கூறும் சூழ்நிலையிலும் நான் உள்ளேன். நிலைமையை கட்டுப்படுத்தும் முயற்சியை விட்டுவிட்டு முறையான நடவடிக்கைகளை நான் எடுக்க வேண்டும். நீங்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருங்கள் என அனைவரிடம் நான் கூறவேண்டும்’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட முன்னாள் சபாநாயகரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரமேஷ் குமார், ’பாலியல் பலாத்காரத்தை தவிர்க்க முடியாதபோது படுத்து கிடந்து அதை மகிழ வேண்டும் என்று பழமொழி உள்ளது. அது போன்றுதான் தற்போது உங்கள் நிலைமை’ என்றார்.
அவரது பேச்சால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. எம்.எல்.ஏ. ரமேஷ் குமார் அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என அவரது கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் கேட்டனர்.
Related Tags :
Next Story