டெல்லியில் இன்று 107 பேருக்கு கொரோனா; 50 பேர் டிஸ்சார்ஜ்


டெல்லியில் இன்று 107 பேருக்கு கொரோனா; 50 பேர் டிஸ்சார்ஜ்
x
தினத்தந்தி 19 Dec 2021 11:06 PM IST (Updated: 19 Dec 2021 11:06 PM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் தற்போது 540 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 14,42,197 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,101 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் டெல்லியில் இன்று 50 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 14,16,556 லட்சமாக உயர்ந்துள்ளது. டெல்லியில் தற்போது 540 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story