மராட்டியம்: ஒரே பள்ளியில் 19 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு...!
மராட்டியத்தில் பள்ளி மாணவர்கள் 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அகமது நகர்,
மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 5 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த பள்ளியில் கடந்த மூன்று நாட்களில் கொரோனா தொற்றால் 19 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அம்மாவட்டத்தின் ஆட்சியர் ராஜேந்திர போசலே கூறுகையில், "தொற்றினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் இல்லை. சிலருக்கு லேசான நோய் அறிகுறி மட்டுமே உள்ளது.
மேலும், மீதமுள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு கொரோனா பறிசோதனை சோதனை நடத்தப்படும்". இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.
Related Tags :
Next Story