அதிகரிக்கும் கொரோனா.. டெல்லியில் மூடப்பட்ட கோவில்கள்!
டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் கோவில்கள் மூடப்பட்டுள்ளன.
புதுடெல்லி,
ஒமைக்ரான் பரவல் காரணமாக உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லியில் நேற்று முன்தினத்தை விட நேற்று கொரோனா பாதிப்பு 86 சதவீதம் அதிகரித்துள்ளது. டெல்லியில் நேற்று ஒரே நாளில் 923 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் 'மஞ்சள் எச்சரிக்கை' விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கோவில்களும் மூடப்பட்டுள்ளன. இதனால் பக்தர்கள் கோவில்களுக்கு சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story