தமிழகத்திற்கு ரூ.185.67 கோடி வருவாய் பற்றாக்குறை மானியம் - மத்திய அரசு விடுவிப்பு


தமிழகத்திற்கு ரூ.185.67 கோடி வருவாய் பற்றாக்குறை மானியம் - மத்திய அரசு விடுவிப்பு
x
தினத்தந்தி 6 Jan 2022 12:37 PM GMT (Updated: 6 Jan 2022 12:37 PM GMT)

நாட்டின் 17 மாநிலங்களுக்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக 9 ஆயிரத்து 871 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.

புதுடெல்லி,

வருவாய் பகிர்வுக்குப் பிந்தைய, வருவாய் பற்றாக்குறை மானியமாக 17 மாநிலங்களுக்கு மத்திய நிதியமைச்சகம், 9 ஆயிரத்து 871 கோடி ரூபாயை இன்று விடுவித்துள்ளது. இது மாநிலங்களுக்கு விடுவிக்கப்பட்ட மானியத்தின் 10-வது தவணையாகும். தகுதி வாய்ந்த மாநிலங்களுக்கு நடப்பு நிதியாண்டில் 98 ஆயிரத்து 710 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமிழகத்திற்கு வருவாய் பற்றாக்குறை மானியமாக இந்த மாதம் 183 கோடியே 67 லட்ச ரூபாயை, மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த தொகையையும் சேர்த்து தமிழகத்திற்கு 2021-22 ஆம் ஆண்டில் இதுவரை, ஆயிரத்து 836 கோடியே 67 லட்ச ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. 

Next Story