ஜனவரி 15 ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தேர்தல் ஆணையம் தடை


ஜனவரி 15 ஆம் தேதி வரை பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தேர்தல் ஆணையம் தடை
x
தினத்தந்தி 8 Jan 2022 4:52 PM GMT (Updated: 8 Jan 2022 4:52 PM GMT)

நாட்டில் கொரோனா 3-வது அலை பரவி வரும் நிலையில் 5 மாநிலத் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா 3-வது அலை பரவி வரும் நிலையில் 5 மாநிலத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. 5 மாநிலத் தேர்தல்களையும் எப்போது நடத்துவது, எத்தனை கட்டங்களாக நடத்துவது என்பது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது. தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.  

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களுக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. வரும் பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல் தொடங்கி மார்ச் 7-ம் தேதிவரை தேர்தல் நடைபெற உள்ளது. கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் உத்தரபிரதேசத்தில் 7 கட்டமாகவும் தேர்தல் நடை பெறுகிறது.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, தேர்தல் பிரசாரங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறியதாவது:-

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் ஜனவரி 15-ஆம் தேதி வரை தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் தெருமுனை பிரசார கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. 

ஜனவரி 15-ஆம் தேதி கொரோனா பாதிப்புகள் மற்றும் கள நிலவரத்தை மதிப்பாய்வு செய்து, பொதுக்கூட்டங்களை அனுமதிப்பது குறித்து முடிவு செய்யும். கொரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படாவிட்டால், அந்த கட்சிகளின் பொதுக்கூட்டங்களை தடை செய்ய தேர்தல் ஆணையம் தயங்காது” என்றார். 

Next Story