பாஜக தலைமை அலுவலக ஊழியர்கள் 50 -பேருக்கு கொரோனா தொற்று

பாஜக தலைமை அலுவல ஊழியர்கள் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் கொரோனா அதிவேகமாக பரவி வருகிறது. இன்று மட்டும் 1.90 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்று பரவல் காரணமாக தலைநகர் டெல்லியில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் 50 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு தொற்று பாதிப்பு க்ண்டறியப்பட்டதையடுத்து பாஜக தலைமை அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. முக்கியமான பணிகள் மேற்கொள்ளும் ஊழியர்கள் மட்டுமே அலுவலகத்திற்கு நேரில் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை தான் பாஜக தலைமை அலுவலகத்தில் உத்தர பிரதேச தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story