தேசிய செய்திகள்

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை..! + "||" + Pongal holiday for 6 districts in Kerala tomorrow ..!

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை..!

கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு நாளை பொங்கல் விடுமுறை..!
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
சென்னை, 

கேரளாவில் 6 மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு கேரள முதல் மந்திரி பினராயி விஜயனுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்ததை அடுத்து கேரள அரசு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.

முன்னதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியிருந்த கடிதத்தில், “தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் வாழும் கேரளாவின் ஆறு மாவட்டங்களில் பொங்கல் பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பது குறித்த கோரிக்கை தொடர்பாக தங்கள் அன்பான உடனடி கவனத்தை ஈர்க்க விழைகிறேன். 

கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14-ஆம் நாள் பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறை அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14ஆம் தேதி தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும். 

ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15 ஆம் நாளினை இந்த ஆறு மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே தமிழ் சமூகங்களுக்கிடையே உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஜனவரி 15-ந்தேதி விடுமுறையை மாற்றி கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் அதிகம் உள்ள 6 மாவட்டங்களில் நாளை (ஜனவரி 14-ந்தேதி) விடுமுறை என கேரள அரசு அறிவித்துள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கேரளாவில் மேலும் 17 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
இந்தியாவிலும் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் கால் பதித்த ஒமைக்ரான் காட்டுத்தீ போல பரவி விட்டது.
2. கேரளாவில் ஒரே நாளில் 29 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி
கோளாவில் இது வரை 181 பேருக்கு ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
3. கேரளாவில் மேலும் 2,605- பேருக்கு கொரோனா
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,605- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. 4 நாள் பயணமாக நாளை கேரளா செல்கிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 4 நாள் பயணமாக கேரளா செல்ல உள்ளார்.
5. கேரளாவில் வரும் 21 ஆம் தேதி முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம்
வருகிற 21-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்களின் ஐக்கிய பேரவை அறிவித்து உள்ளது.