கேரள அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு


கேரள அரசின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 17 Jan 2022 12:27 AM GMT (Updated: 17 Jan 2022 12:27 AM GMT)

கேரள அரசின் ஸ்ரீ நாராயண குருவின் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்து உள்ளது.புதுடெல்லி,


டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி அணிவகுப்பு நடைபெறுகிறது. இந்த விழாவில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலங்களின் சிறப்புகளை விளக்கும் வகையில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் இடம் பெறும்.

அந்த வகையில், கேரள அரசின் ஸ்ரீ நாராயண குருவின் அலங்கார ஊர்தி இடம்பெற இருந்தது.  எனினும் இதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. இவர், ஒன்றே குலம், ஒருவனே தெய்வம் என்ற தத்துவத்தினை வலியுறுத்தியவர். இவரின் அலங்கார ஊர்தி நிராகரிக்கப்பட்டதற்கு கேரளாவை சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சிகளும், அரசும் கடும் எதிர்ப்பும், விமர்சனங்களும் தெரிவித்துள்ளன.


Next Story