அயோத்தி: ராமர் கோவில் கட்டுமானத்தின் மூன்றாம் கட்ட பணிகள் துவக்கம்


அயோத்தி: ராமர் கோவில் கட்டுமானத்தின் மூன்றாம் கட்ட பணிகள் துவக்கம்
x
தினத்தந்தி 24 Jan 2022 7:05 PM GMT (Updated: 24 Jan 2022 7:05 PM GMT)

அயோத்தி ராமர் கோவிலின் மூன்றாம் கட்ட கட்டுமானப்பணிகள் நேற்று தொடங்கியது.

அயோத்தி,

அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணியின் மூன்றாம் கட்டப் பணிகள் வேத சம்பிரதாயங்களுக்கு மத்தியில் நேற்று தொடங்கியது. 

இந்த தகவலை ஸ்ரீராம் ஜென்மபூமி தீரத் க்ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். பீடம் அமைக்கும் நிறைவடைந்த பின், கோவிலின் பிரதான கட்டடம் கட்டும் பணிகள் துவங்கும் என்று கூறினார்.

முதல் மற்றும் இரண்டாம் கட்ட கட்டுமான பணிகளில், கோவிலின் அடித்தளம் மற்றும் தெப்பம் அமைக்கப்பட்டது. அனேகமாக ஜூன் மாதத்திற்குள் பீடம் அமைக்கும் பணிகள் முடிவடையும் என அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Next Story