பூஜை சரியாக செய்யவில்லை என வாக்குவாதம்: குடும்பத்தினர் மீது கத்திகுத்து தாக்குதல் நடத்திய சாமியார்...!


பூஜை சரியாக செய்யவில்லை என வாக்குவாதம்: குடும்பத்தினர் மீது கத்திகுத்து தாக்குதல் நடத்திய சாமியார்...!
x
தினத்தந்தி 27 Jan 2022 12:25 AM IST (Updated: 27 Jan 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

பூஜை சரியாக செய்யவில்லை என எழுந்த வாக்குவாதத்தில் குடும்பத்தினரை சாமியார் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராய்ப்பூர்,

சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தை சேர்ந்தவர் தினு சர்மா (38). இவரது மனைவி நிர்மலா (38). இவர்களுக்கு ஜிதீஷ் (18) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

இதற்கிடையில், சர்மாவின் மகன் ஜிதீஷூக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக விஷ்னு ஷனு (44) என்ற சாமியரை அழைத்து தங்கள் வீட்டில் வைத்து கடந்த செவ்வாய்கிழமை நண்பகல் சில பூஜைகள் செய்துள்ளனர். அப்போது, சர்மா பூஜை, மந்திரிங்களை சரியாக சொல்லவில்லை என்று சாமியார் விஷ்னு ஷனு கூறியுள்ளார். இதனால், சர்மாவுக்கு சாமியார் விஷ்னு ஷனுவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் சாமியார் விஷ்னு, சர்மா வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் மாலை 4 மணியளவில் சர்மா வீட்டிற்கு சாமியார் விஷ்னு வந்துள்ளார். மேலும், தான் கொண்டுவந்த பிரசாதத்தை சர்மா அவரது மனைவி நிர்மலா மற்றும் மகன், மகளுக்கு கொடுத்துள்ளார். பிரசாதத்தை சாப்பிட்ட குடும்பத்தினர் அனைவருக்கும் தலை சுற்றலுடன் மயக்கம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, தான் மறைத்துக்கொண்டுவந்த கூர்மையான கத்தியை கொண்டு சர்மா அவரது மனைவி நிர்மலா மகன் ஜிதீஷ் மற்றும் மகள் ஆகிய 4 பேரையும் சாமியார் குத்தியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அனைவரும் அலறியுள்ளனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் வந்து பார்த்துள்ளனர்.

அப்போது, குடும்பத்தினர் அனைவரும் கத்திக்குத்து தாக்குதலுக்கு உள்ளானது தெரியவந்தது. இதையடுத்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் கத்திகுத்து தாக்குதல் நடத்திய சாமியார் விஷ்னு ஷனுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.     
1 More update

Next Story