காங்கிரசில் இருந்து யார் விலகினாலும் கவலையில்லை, சேர்ந்தாலும் கவலையில்லை - அசோக் கெலாட்


காங்கிரசில் இருந்து யார் விலகினாலும் கவலையில்லை, சேர்ந்தாலும் கவலையில்லை - அசோக் கெலாட்
x
தினத்தந்தி 26 Jan 2022 11:04 PM GMT (Updated: 26 Jan 2022 11:04 PM GMT)

காங்கிரசில் இருந்து யாரேனும் விலகினாலும் கவலையில்லை, காங்கிரசில் சேர்ந்தாலும் கவலையில்லை என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூர்,

5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மாற்று கட்சிகளில் இணையும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் காங்கிரசில் இருந்து பல்வேறு மூத்த தலைவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இணைந்த வண்ணம் உள்ளனர்.

காங்கிரசில் இருந்து யாரேனும் விலகினாலும் கவலையில்லை, காங்கிரசில் சேர்ந்தாலும் கவலையில்லை என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

குடியரசுதின விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் அசோக் கெலாட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காங்கிரசில் இருந்து பல்வேறு மூத்த தலைவர்கள் விலகுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கெலாட், காங்கிரஸ் மிகப்பெரிய அமைப்பு. காங்கிரஸ் 135 ஆண்டுகால வரலாறு கொண்டது. அது கடல்போன்றது. இதில், மிகப்பெரிய நபர்கள் கட்சியில் இருந்து விலகுவார்கள் மேலும், கட்சிக்கு மீண்டும் திரும்புவார்கள். இதை வரலாறு கண்டுள்ளது.

காங்கிரசில் இருந்து யாரேனும் விலகினாலும் கவலையில்லை, காங்கிரசில் சேர்ந்தாலும் கவலையில்லை. கட்சியில் இருந்து விலகியவர்களும் வரவேற்கப்படுகின்றனர். கட்சிக்கு வந்தவர்களும் வரவேற்கப்படுகின்றனர்’ என்றார்.


Next Story