மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
புதுடெல்லி
கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனையுடன் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் மற்றும் கோவிஷீல்டு தயாரிப்பாளர் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவை கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு அனுமதி கோரி இருந்தன. மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அளித்தன. இது ஜனவரி 19 அன்று கொரோனா தொடர்பான நிபுணர் குழுவின் ஒப்புதலுக்குப் பிறகு சந்தை விற்பனைக்கு ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையம் இதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
இரண்டு தடுப்பூசிகளின் சந்தை விற்பனை புதிய மருந்துகள் மற்றும் மருத்துவ பரிசோதனை விதிகள், 2019ன் கீழ் அங்கீகரிக்கப்பட்டு உள்ளது.
கோவிஷீல்டு, கோவாக்சினை (தடுப்பூசிகள் ) இனி மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகள் நேரடியாக கொரோனா தடுப்பூசிகளை பெற்று கொள்முதல் செய்து விற்பனை கொள்ளலாம் .அதே வேலை தடுப்பூசிகள் மெடிக்கல் கடைகளில் விற்பனை செய்யப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது
மருத்துவமனை மற்றும் கிளினிக்குகள் தங்கள் கொள்முதல் ,விற்பனை செய்துள்ள தடுப்பூசி விவரங்களை மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு மையத்திடம் 6 மாதத்திற்கு ஒரு முறை அறிக்கையாக தாக்கல் செய்து கொள்ள வேண்டும்.மேலும் தடுப்பூசி கொள்முதல் ,விற்பனை தகவல்களை கோவின் இணையதளத்தில் பதிவிட்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத சாமியார்களில் நித்யானந்தாவும் ஒருவர். பிரபல நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருந்ததாக வீடியோ காட்சி வெளியானபோது மிகவும் பிரபலமாக பேசப்பட்டார் நித்யானந்தா.
சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 15 நாளைக்கு ஒருமுறை விடுப்பு வழங்கப்படும் என்றும், இரவு ரோந்து செல்லும் போலீசாருக்கு மாதம் ரூ.300 சிறப்புப்படி வழங்கப்படும் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றவாளிகளை கண்டுபிடிக்க 55 சுங்கச்சாவடிகளில் தானியங்கி நம்பர் பிளேட் கேமராக்கள் நிறுவப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.