மராட்டியத்தில் இன்று மேலும் 25,425பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டியத்தில் இன்று மேலும் 25,425பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 27 Jan 2022 10:09 PM IST (Updated: 27 Jan 2022 10:09 PM IST)
t-max-icont-min-icon

மராட்டியத்தில் இன்று மேலும் 25,425பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 25,425பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76,30,606 ஆக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் இன்று மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,42,358 ஆக அதிகரித்துள்ளது. 

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் 36,708 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,97,001ஆக அதிகரித்துள்ளது. தற்போது வரை மாநிலத்தில் 2,87,397 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
1 More update

Next Story