ஓமைக்ரானை விட 'ஓ மித்ரோன்' ஆபத்தானது: மோடியை சாடிய சசி தரூர்!

காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், பிரதமர் நரேந்திர மோடியின் பிரபலமான 'மித்ரோன்' என்ற சொற்றொடரை மேற்கோள் காட்டி கடுமையாக சாடினார்.
புதுடெல்லி
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான சசி தரூர், கொரோனா வைரஸின் ஓமைக்ரான் மாறுபாட்டை ‘ஓ மித்ரான்’ என்ற வார்த்தையுடன் ஒப்பிட்டு வார்த்தை ஜாலத்தால் பிரதமர் மோடியை சாடினார்.
‘ஓ மித்ரோன்’ என்பது பிரதமர் நரேந்திர மோடி தேசத்திற்கு உரையாற்றும் போது அவர் தனது உரைகளில் அடிக்கடி பயன்படுத்தும் 'மித்ரோன்' என்ற சொற்றொடரை கிண்டல் செய்ததாக தெரிகிறது.
சசி தரூர் தனது டுவிட்டர் பக்கத்தில் " ”ஒமைக்ரானைவிட மிகவும் கொடியது மோடியின் 'ஓ மித்ரோன்'. நாங்கள் 'ஓ மித்ரோன்' விளைவை அன்றாடம் அளந்து வருகிறோம்.
அதிகரிக்கும் பிரிவினைவாதம், வெறுப்புப் பிரச்சாரங்கள், மதவெறி, நாட்டின் அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல் மற்றும் வலுவிழக்கும் ஜனநாயகம் ஆகியன இதன் அளவுகோளாக இருக்கின்றன. ஓ மித்ரோனை பொறுத்தவரை லேசான உருமாறிய வைரஸ் என்றெல்லாம் பாகுபாடே இல்லை” என்று கூறியுள்ளார்.
மித்ரோன் என்றால் இந்தி மொழியில் நண்பர்களே என அர்த்தம். பிரதமர் மோடி தனது பேச்சில் நாட்டு மக்களை இப்படி நண்பர்களே (ஓ மித்ரோன்) என்ற அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story