அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்


அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க திட்டம்-  நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 1 Feb 2022 11:48 AM IST (Updated: 1 Feb 2022 11:55 AM IST)
t-max-icont-min-icon

2வது முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.

புதுடெல்லி

பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இதையொட்டி மத்திய நிதியமைச்சகத்திற்கு காலை 8.45 மணிக்கு அவர் வருகை தந்தார். இதேபோல் நிதித்துறை இணை மந்திரிகள் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் காரத் ஆகியோர் நிதி அமைச்சகத்திற்கு வருகை தந்தனர். 

இதைத் தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தை, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை மந்திரிகள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சந்தித்தனர். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர்  நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்தார்.

தொடர்ந்து 2வது முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்.

 அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபத்தை வெளிப்படுத்தி நிதி மந்திரி சீதாராமன் தனது பட்ஜெட் உரையைத் தொடங்கினார்.

* சவால்களை எதிர்கொள்ளும் வலிமையான நிலையில் இந்தியா தற்போது உள்ளது.

* இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 9.2% என மதிப்பிடப்பட்டுள்ளது, இது அனைத்து பெரிய பொருளாதாரங்களிலும் மிக அதிகமானது ஆகும்.கொரோனா காலகட்டத்தில் நாட்டின் பொருளாதாரம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது. 

* மத்திய அரசு 2014 முதல் குடிமக்களுக்கு அதிகாரமளிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.

* இந்த பட்ஜெட் அடுத்த 25 ஆண்டுகளில் பொருளாதாரத்தை அடித்தளம் அமைத்து வழிநடத்தும்.

*  உலகிலேயே மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் பொருளாதார நாடாக இந்தியா உள்ளது

* ஆத்மநிர்பர் பாரத் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.

* ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் முழுமையாக தனியாருக்கு பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளது.

* பட்ஜெட் 2022 பொது முதலீடு மற்றும் மூலதன செலவினங்களுக்கான ஒதுக்கீட்டில் கூர்மையான அதிகரிப்பை வழங்கியுள்ளது.

* இந்த பட்ஜெட் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும்

* அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

* விரைவுச் சாலைகளுக்கான பிரதமர் கதிசக்தி மாஸ்டர் திட்டம் அடுத்த நிதியாண்டில் வகுக்கப்படும்.

என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

Next Story