ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்


ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
x
தினத்தந்தி 1 Feb 2022 1:40 PM IST (Updated: 1 Feb 2022 1:40 PM IST)
t-max-icont-min-icon

பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்த திட்டம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

புதுடெல்லி

பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.இதையொட்டி மத்திய நிதியமைச்சகத்திற்கு காலை 8.45 மணிக்கு அவர் வருகை தந்தார்.இதேபோல் நிதித்துறை இணை மந்திரிகள் பங்கஜ் சவுத்ரி மற்றும் பகவத் காரத் ஆகியோர் நிதி அமைச்சகத்திற்கு வருகை தந்தனர். 

இதைத் தொடர்ந்து சம்பிரதாய முறைப்படி பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன் ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்தை, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன், நிதித்துறை இணை மந்திரிகள் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் சந்தித்தனர். ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. பின்னர்  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றம் வருகை தந்தார்.

தொடர்ந்து 2வது முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

 அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

*ரிசர்வ் வங்கி மூலம் டிஜிட்டல் கரன்சி அறிமுகம் செய்யப்படும்.

 *பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிட்டல் ரூபாயை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்று எப்எம் தெரிவித்துள்ளது.

* டிஜிட்டல் கரன்சி மூலம்  இணையபரிவர்த்த்னை ஊக்குவிக்கப்படும்.

என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Next Story