கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 71% குறைவு
கர்நாடக மாநிலத்தில் இன்று 14,366 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் இன்று 14,366 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் அங்கு 24,172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 71 சதவீதம் குறைந்துள்ளது.
தலைநகர் பெங்களூருவில் மட்டும் 6,685 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. மாநிலம் முழுவதும் இன்று 58 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். அதே சமயம் மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 60,914 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது கர்நாடகத்தில் 1,97,725 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story