மனைவி மற்றும் 13 வயது மகள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய நபர்!


மனைவி மற்றும் 13 வயது மகள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய நபர்!
x
தினத்தந்தி 2 Feb 2022 3:05 PM IST (Updated: 2 Feb 2022 3:05 PM IST)
t-max-icont-min-icon

பெங்களூரில் கணவன் ஒருவர் மனைவி மற்றும் 13 வயது மகள் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு,

38 வயதான பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவி மீது கொலை செய்யும் நோக்கில் கொதிக்கும் சமையல் எண்ணெயை ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது 13 வயது மகள் தன் தாயை காப்பாற்ற வந்த போது சிறுமியின் மீதும் எண்ணெய் பட்டுள்ளது. 

தாய் மற்றும் மகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அந்த நபரை வீட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர். அக்கம் பக்கத்தினரின் வந்ததால் அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘ஜனவரி 31 அதிகாலையில் தென்கிழக்கு பெங்களூரு ஆடுகோடிக்கு அருகிலுள்ள எல்.ஆர் நகரில் இந்த இதயத்தை உலுக்கும் சோக சம்பவம் நடந்தது. தாமஸ் தன் மனைவியிடம் தண்ணீரை சூடாக்க சமையலறைக்குள் செல்வதாக கூறினார். ஆனால் தண்ணீருக்கு பதிலாக, ஒரு பாத்திரத்தில் சமையல் எண்ணெயை ஊற்றி சூடாக்கினார்.

பின்னர் அந்தோணியம்மா அமர்ந்திருந்த இடத்திற்குச் சென்று, ஒரு மரக்கட்டையை எடுத்து அவரது தலையில் அடித்தார், அதனால் அவர் மயக்கமுற்றார். பின்னர் அவர் சமையலறைக்குள் நுழைந்து, கொலை செய்யும் நோக்கில் கொதிக்கும் எண்ணெயை எடுத்து அவரது மனைவியின் உடலில் ஊற்றினார். 

இதற்குள் தூக்கத்தில் இருந்து எழுந்த அவரது மகள், தந்தை தன் தாயை கொலை செய்ய முயற்சிப்பதைக் கண்டு, தாயைக் காப்பாற்ற முயற்சித்தார்.இதனால் கோபமடைந்த தாமஸ் அந்த இளம்பெண்ணின் கைகளிலும் சிறிது எண்ணெயை ஊற்றினார். தாய் மற்றும் மகளின் அலறல் சப்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அந்த நபரை வீட்டை விட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தினர். அக்கம் பக்கத்தினர் வந்ததால் அந்த பெண்ணின் உயிரைக் காப்பாற்ற முடிந்தது' என்று கூறினர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story