இளம் பெண்ணுக்கு அந்த இடத்தில் கொரோனா சோதனை எடுத்தவருக்கு 10 வருடம் சிறை


இளம் பெண்ணுக்கு  அந்த இடத்தில் கொரோனா சோதனை எடுத்தவருக்கு 10 வருடம் சிறை
x
தினத்தந்தி 4 Feb 2022 11:58 AM IST (Updated: 4 Feb 2022 12:25 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய மாநிலத்தில் இளம் பெண்ணுக்கு அந்த இடத்தில் கொரோனா சோதனை செய்தவருக்கு 10 வருடம் சிறை விதிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டிய மாநிலம் அமராவதியைச் சேர்ந்த லேப் டெக்னீசியன் கொரோனா சோதனைக்காக என்று கூறி பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து ஸ்வாப் (Swab) மாதிரியை எடுத்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் வணிக வளாகத்தில் பணிபுரியும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவருடன் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒரு லேப்பில் (Lab) கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகளுக்கான ஸ்வாப் மாதிரிகள் மூக்கு மற்றும் தொண்டையில் இருந்து மட்டுமே எடுக்கப்படுகின்றன.

ஆனால் அந்த லேப் டெக்னீசியன் புகார் அளித்துள்ள பெண்ணிடம் மேலும் சோதனை செய்ய வேண்டும் என்று கூறி அந்த பெண்ணின் அந்தரங்க பாகங்களில் இருந்து ஸ்வாப் மாதிரியை எடுத்ததாக கூறப்படுகிறது. சந்தேகமடைந்த அந்த பெண் இந்த சம்பவத்தை தனது சகோதரரிடம் தெரிவித்தார். மருத்துவரிடம் சென்று சகோதரர் விசாரித்துள்ளார். அத்தகைய சோதனை எதுவும் தேவையில்லை என மருத்துவர் கூறியுள்ளார்.

இதையடுத்து அந்த பெண் பத்னேரா போலீசில் புகாரளித்தார். இதையடுத்து லேப் டெக்னீசியனை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் மொத்தம் 12 சாட்சிகள் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இரு தரப்பினரையும் விசாரித்த பிறகு ஐபிசி சட்டப்பிரிவுகள் 354 மற்றும் 376 ஆகியவற்றின் கீழ் லேப் டெக்னீசியனை குற்றவாளி என்று கண்டறிந்து 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்துள்ளது.

Next Story