தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்: அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
புதுடெல்லி,
தஞ்சையை அடுத்துள்ள மைக்கேல்பட்டி தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக மாணவியின் தந்தை முருகானந்தம் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டனர்.
மேலும் மாணவியின் தந்தை முருகானந்தம் மற்றும் தனியார் பள்ளி சார்பில் தனித்தனியாக சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே மாணவி தற்கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என தெரிவித்து வக்கீல் எஸ். ஜோசப் அரிஸ்டாட்டில் தற்போது மனு தாக்கல் செய்துள்ளார்.
Related Tags :
Next Story