காஷ்மீரில் இருந்து வெளியேறிய 610 பண்டிட் குடும்பங்களின் சொத்துக்கள் மீண்டும் ஒப்படைப்பு


காஷ்மீரில் இருந்து வெளியேறிய 610 பண்டிட் குடும்பங்களின் சொத்துக்கள் மீண்டும் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 9 Feb 2022 3:27 PM IST (Updated: 9 Feb 2022 3:27 PM IST)
t-max-icont-min-icon

1980-90 ஆண்டு காலகட்டத்தில் பயங்கரவாத தாக்குதல்களால் காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் தஞ்சமடைந்தன.

புதுடெல்லி,

1980-90 ஆண்டு காலகட்டத்தில் காஷ்மீரில் பண்டிட் மக்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றது. இந்த பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெளியேற்றி நாட்டின் பல்வேறு பகுதிகளில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.

இதனிடையே, பயங்கரவாத அச்சுறுத்தலால் காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட் மக்களை மீண்டும் குடியமர்த்தும் பணிகளில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், 1980-90 ஆண்டு காலகட்டத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலால் காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட் மக்களில் கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை பேருக்கு அவர்களது சொத்துக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு மத்திய அரசு பதில் அளித்துள்ளது. மத்திய உள்துறை இணை மந்திரி நிதியானந்த் ராய் மாநிலங்களவையில் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், 1980-90 ஆண்டு காலகட்டத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலால் காஷ்மீரில் இருந்து வெளியேறிய பண்டிட் மக்களில் கடந்த 5 ஆண்டுகள் 610 பண்டிட் குடும்பங்களின் சொத்துக்களில் மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது’ என தெரிவித்தார். 
1 More update

Next Story