எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை முடிக்க கோரிய மனு: சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை
எம்.பி., எம்.எல்.ஏ. மீதான வழக்குகளை முடிக்க கோரிய மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மீதான வழக்குகளை விசாரிக்க போதிய கோர்ட்டுகளை ஏற்படுத்தி அந்த குற்ற வழக்குகளை ஓராண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என பா.ஜ.க.வைச் சேர்ந்த அஸ்வினி உபாத்யாயா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்ட விஜய் ஹன்சாரியா, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் ஆஜராகி, ‘இந்த வழக்கு தொடர்பாக விரிவான அறிக்கை சமர்ப்பித்துள்ளேன். வழக்கை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்’ என முறையிட்டார்.
இதை ஏற்ற தலைமை நீதிபதி, வழக்கு குறித்து விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story