கர்நாடகத்தில் இன்று 3,202 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
கர்நாடக மாநிலத்தில் தற்போது 38,747 பேர் கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பெங்களூரு,
கர்நாடக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 3,202 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39,24,297 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகாவில் இன்று 38 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, இதுவரை மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 39,613 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் இன்று ஒரே நாளில் 8,988 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
மாநிலம் முழுவதும் தற்போது 38,747 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை மொத்தம் 38,45,903 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story