உத்தர பிரதேசத்தில் 55 தொகுதிகளுக்கு நாளை 2-ம் கட்ட தேர்தல்
உத்தர பிரதேச மாநிலத்தில் நாளை 55 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த 10 ஆம் தேதி 58 தொகுதிகளுக்கு முதற்கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், நாளை 55 தொகுதிகளுக்கு 2-ம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. சாஹரன்பூர், அம்ரோஹா, ராம்பூர், பரைலி, பதாவுன், ஷாஜகான்பூர், பிஜ்னோர், மொரதாபாத் மற்றும் சம்பால் ஆகிய 9 தொகுதிகள் பட்டியல் இனத்தவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நாளை தேர்தல் நடைபெற உள்ள 55 தொகுதிகளில் மொத்தம் 586 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மொத்தமாக 2 கோடியே ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 441 வாக்காளர்கள் 2-ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவர் முகமது அஸம்கான், மாநில நிதி மந்திரி சுரேஷ் கண்ணா, பாஜகவில் இருந்து விலகி சமாஜ்வாடி கட்சியில் இணைந்த முன்னாள் மந்திரி தரம்சிங் ஷைனி, நகர்ப்புற மேம்பாடுத்துறை இணை மந்திரி மகேஷ் சந்திரகுப்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நாளை நடைபெற உள்ள 2-ம் கட்ட தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
Related Tags :
Next Story