காஷ்மீர்: 31 மாதங்களுக்குப் பிறகு பிப்ரவரி 28-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறப்பு
காஷ்மீரில் 31 மாதங்களுக்குப் பிறகு வருகிற பிப்ரவரி 28-ந்தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
ஸ்ரீநகர்,
கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அதனால் பாதுகாப்பு காரணமாக காஷ்மீரில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டன. குளிர்கால விடுமுறைக்குப் பிறகு மார்ச் 2020-ல் பள்ளிகள் திறக்கப்பட்டன. அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக சில வாரங்களில் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டன.
கடந்த ஆண்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் சுழற்சி முறையில் வகுப்புகளை மீண்டும் தொடங்கியது. ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் 31 மாதங்களாக மூடப்பட்டுள்ள பள்ளிகள் வருகிற பிப்ரவரி 28-ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளன. தற்போது காஷ்மீர் பகுதியில் கொரோனா தொற்றின் நிலைமை குறித்து பகுப்பாய்வு செய்த ஜம்மு காஷ்மீர் மாநில பேரிடர் மேலாண்மைக் குழு அனைத்து பள்ளிகளையும் மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story