கோவாவில் 100 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை!


கோவாவில் 100 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை!
x
தினத்தந்தி 17 Feb 2022 9:44 PM IST (Updated: 17 Feb 2022 9:44 PM IST)
t-max-icont-min-icon

கோவா மாநிலத்தில் மருத்துவ பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கோவா மக்கள் ஆகியோரின் உதவியுடன் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

பனாஜி,

கோவாவில் 100 சதவீத மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது. அங்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள தகுதியுடைய பொதுமக்கள் அனைவருக்கும் 2 டோஸ் தடுப்பூசி வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 11 லட்சத்து 66 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து பேசிய கோவா கவர்னர் பி எஸ் ஸ்ரீதரண் பிள்ளை, “கோவா மாநிலத்தில் மருத்துவ பணியாளர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கோவா மக்கள் ஆகியோரின் உதவியுடன் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

கொரோனா மூன்றாம் அலை பரவல் வேகம் வெகுவாக குறைந்து வருகிறது.

நாம் அன்றாட இயல்பு நிலைமைக்கு திரும்பியுள்ளோம்” என்று கூறினார்.

Next Story