தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு


தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து; சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு
x
தினத்தந்தி 19 Feb 2022 11:38 PM IST (Updated: 19 Feb 2022 11:38 PM IST)
t-max-icont-min-icon

சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் அஸ்வினி உபாத்யாயா தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேர்தல் அறிக்கையை தொலைநோக்கு ஆவணமாக கருதி, அதில் தெரிவிக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என்ற உறுதியை அறிவிக்கவும், வெற்றி பெறும் அரசியல் கட்சிகள் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சட்டப்பூர்வமாக்கி வலியுறுத்தவும் மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயல்பாடுகளை முறைப்படுத்தவும், அவை வெளியிடும் தேர்தல் அறிக்கைக்கு பொறுப்பேற்கச் செய்யவும் உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய சட்டம் மற்றும் நீதித்துறைக்கு உத்தரவிட வேண்டும். இதே விவகாரத்தில் தேர்தல் ஆணையமும் தனது உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி வழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் தெரிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசியல் கட்சிகளின் சின்னங்களை முடக்கவும், கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story