அகிலேஷ் யாதவ் தேர்தல் விதிகளை மீறினாரா..? தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார்


அகிலேஷ் யாதவ் தேர்தல் விதிகளை மீறினாரா..? தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார்
x
தினத்தந்தி 21 Feb 2022 3:29 AM IST (Updated: 21 Feb 2022 3:29 AM IST)
t-max-icont-min-icon

பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரிக்கை விடுத்து அகிலேஷ் யாதவ் மீது தேர்தல் கமிஷனில் பா.ஜனதா புகார் அளித்துள்ளது.

லக்னோ, 

உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் நேற்று 3-ம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. அப்போது சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தலைமை தேர்தல் கமிஷனருக்கு பா.ஜனதா புகார் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

இதுதொடர்பான அந்த கடிதத்தில், “சாய்பை நகரில் ஓட்டு போட்ட அகிலேஷ் யாதவ், ஓட்டுச்சாவடிக்கு 100 மீட்டர் சுற்றளவுக்குள் பத்திரிகையாளர்களை அழைத்து பேட்டி அளித்தார். 100 மீட்டர் சுற்றளவுக்குள் இத்தகைய உரையாடலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வாக்காளர்கள் மீது செல்வாக்கு செலுத்தும் நோக்கத்தில், அகிலேஷ் யாதவ் திட்டமிட்டே பேட்டி அளித்தார். அவரது செயல் தேர்தல் விதிமீறல் ஆகும்.

ஆகவே, அவர் மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். நியாயமான தேர்தல் நடப்பதற்காக அவர் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று பா.ஜனதா கூறியுள்ளது.

Next Story