ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி ஹேமானந்த பிஸ்வால் காலமானார்...!


ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி ஹேமானந்த பிஸ்வால் காலமானார்...!
x
தினத்தந்தி 25 Feb 2022 11:01 PM IST (Updated: 25 Feb 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி ஹேமானந்த பிஸ்வால் இன்று காலமானார்.

புவனேஸ்வர்,

ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரியும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹேமானந்தா பிஸ்வால் உடல் நலக்குறைவு காரணமாக புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 83. இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஹேமானந்தா பிஸ்வால் ஒடிசாவின் முதல்-மந்திரியாக இரண்டு முறை பணியாற்றியுள்ளார். 

மறைந்த பிஸ்வாலின் உடல் சனிக்கிழமை (நாளை) காலை 6 மணிக்கு புவனேஸ்வர் நயபள்ளியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு காலை 10 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்றும் அதன்பின்னர் அரசு நெறிமுறைகளின்படி இறுதி சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story