இங்கிலாந்தில் நடைபெற உள்ள பன்னாட்டு போர் விமான பயிற்சியில் இருந்து இந்தியா விலகல்
பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் பங்கேற்கும் பயிற்சி வரும் 6-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.
புதுடெல்லி,
உலகின் பல்வேறு நாடுகளின் போர் விமானங்கள் பங்கேற்கும் பயிற்சி பல ஆண்டுகளாக இங்கிலாந்து விமானப்படையால் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான போர் விமான பயிற்சி மார்ச் 6-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த பயிற்சியில் இந்தியாவும் பங்கேற்கவிருந்தது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் ரக போர் விமானங்கள் இந்த பயிற்சியில் ஈடுபடவிருந்தது.
இந்த பயிற்சி மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெற உள்ள பன்னாட்டு போர் விமான பயிற்சியில் பங்கேற்கப்போவதில்லை என்று இந்திய விமானப்படை இன்று அறிவித்துள்ளது. உக்ரைன் ரஷியா இடையே போர் ஏற்பட்டுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த பயிற்சியில் இந்தியா பங்கேற்காது என விமானப்படை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story