இந்தியாவில் 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 28 Feb 2022 9:20 AM IST (Updated: 28 Feb 2022 9:20 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 8,013 ஆக குறைந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.02 லட்சமாக வீழ்ச்சி அடைந்தது.

புதுடெல்லி, 

இந்தியா தொடர்ந்து கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலையில் சரிவை சந்தித்து வருகிறது. தினசரி பாதிப்பு, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, உயிர்ப்பலிகள் எல்லாமே குறைந்து வருகின்றன. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 11 ஆயிரத்து 499 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கை நேற்று 10,273 ஆக குறைந்தது. 

இந்நிலையில் இன்று புதிதாக 8,013 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இது நேற்றைய பாதிப்பை விட 22 சதவீதம் குறைவானதாகும். இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 8 ஆயிரத்து 013 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,29,24,130 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 119 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,13,843 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 16,765 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,23,07,686 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1,02,601 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,77,50,86,335 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,90,321 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 7,23,828 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 76,74,81,346 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.

Next Story