குவாட் தலைவர்களின் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு..!


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 3 March 2022 5:44 AM GMT (Updated: 3 March 2022 5:44 AM GMT)

இன்று நடைபெற உள்ள குவாட் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்க உள்ளார்.

புதுடெல்லி,

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பு ‘குவாட்’ ஆகும்.  

இந்நிலையில் குவாட் தலைவர்களின் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

செப்டம்பர் 2021ல் வாஷிங்டனில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டிற்குப் பிறகு தலைவர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். இதில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முக்கிய முன்னேற்றங்கள் பற்றிய பேச உள்ளனர்.  

மேலும் இணைய பாதுகாப்பு, கடல்சார் பாதுகாப்பு, மனிதாபிமான உதவிகள், பேரிடர் நிவாரணம், பருவநிலை மாற்றம், கல்வி உள்பட சமகால உலகளாவிய பிரச்சினைகள் குறித்தும் தலைவர்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்வார்கள் என கூறப்பட்டுள்ளது.


Next Story