ருமேனியா-இந்தியாவுக்கு மார்ச் 3 வரை 5,245 பேர் வருகை; மத்திய அரசு தகவல்


ருமேனியா-இந்தியாவுக்கு மார்ச் 3 வரை 5,245 பேர் வருகை; மத்திய அரசு தகவல்
x
தினத்தந்தி 4 March 2022 6:05 PM IST (Updated: 4 March 2022 6:05 PM IST)
t-max-icont-min-icon

உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவில் இருந்து மார்ச் 3ந்தேதி வரை 5,245 இந்தியர்கள் நாட்டுக்கு திரும்பி அழைத்து வரப்பட்டு உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.


புதுடெல்லி,



உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள தாக்குதல் 9வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மக்கள் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.  அந்த வகையில், உக்ரைனில் தங்கியிருந்த இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இதன்படி, போலந்து, ருமேனியா, ஹங்கேரி, ஸ்லோவேக்கியா ஆகிய நாடுகளில் 24*7 கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்கப்பட்டதுடன் மத்திய மந்திரிகள் ஹர்தீப்சிங் புரி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, வி.கே. சிங் ஆகியோர் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சென்றுள்ளனர்.  நேற்றுவரை 30 விமானங்களில் 6,400 இந்தியர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர்.  இந்த நிலையில், உக்ரைனின் அண்டை நாடான ருமேனியாவில் இருந்து மார்ச் 3ந்தேதி வரை 5,245 இந்தியர்கள் நாட்டுக்கு திரும்பி அழைத்து வரப்பட்டு உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.  தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.


Next Story