அசாம் மாநிலத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு!


அசாம் மாநிலத்தில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு!
x
தினத்தந்தி 6 March 2022 5:24 AM GMT (Updated: 6 March 2022 5:24 AM GMT)

அசாம் மாநிலத்தில் 80 நகராட்சி இடங்களுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது.

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் 977 வார்டுகளை உள்ளடக்கிய 80 நகராட்சி  இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி தேர்தலுக்கான  வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் 36 மாவட்டங்களில் உள்ள 2,054 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 16,73,899 ஆகும். அவற்றுள் 8,32,348 ஆண்கள் 8,41,534 பெண்கள் மற்றும் 17 மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.

அசாம் உள்ளாட்சித் தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக, வாக்குச்சீட்டுகளுக்கு பதிலாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்( இவிஎம்)  மூலம் வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்காக விவிபேட் இல்லாத 5,900 இவிஎம்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை மார்ச் 9ம் தேதியன்று நடைபெறும் என்று அசாம் மாநில தேர்தல் ஆணையர் அலோக் குமார் தெரிவித்தார்.

Next Story