லாரியுடன் கார் மோதியதில் 5 பேர் பலி..!
உத்தரப்பிரதேசத்தில் லாரியுடன் கார் மோதியதில் 5 பேர் பலியாகியுள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலத்தில் லாரியுடன் கார் நேருக்கு நேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தில் இட்டாவா-சாய்பாய் சாலையில் நாக்லா ரத்தோர் கிராமத்திற்கு அருகில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 5 பேர் பலியான நிலையில் மேலும் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
உயிரிழந்த 5 பேரும் ஜஸ்வந்த்நகரில் உள்ள ராதிகா போட்டோ ஸ்டுடியோவில் பணிபுரிந்து வந்தனர்.
காயமடைந்த 5 பேரும் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story