4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி!! பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை
4 மாநிலங்களிலும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை பெற்றுள்ளன.
புதுடெல்லி,
உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை நிரூபிக்கும் வகையிலேயே தேர்தல் முடிவுகள் அமைந்து வருகின்றன எனலாம். இப்போதைய நிலவரம், பாஜக 4 மாநிலங்களில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்பதை காட்டுகிறது.
உத்தரபிரதேச நிலவரம்:
தற்போதைய நிலவரப்படி, உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க. 245 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதல் இடத்தில் உள்ளது. சமாஜ்வாதி கட்சி 96 இடங்களை பெற்று 2வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில், உத்தரபிரதேசத்தில் ஆட்சியமைக்க 202 இடங்களை வெல்ல வேண்டும். வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை காணுகையில், 267 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
உத்தரகாண்ட் நிலவரம்:
உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 42 தொகுதிகளில் பாஜகவும், 24 தொகுதிகளில் காங்கிரசும், மற்ற கட்சிகள் 4 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் பெரும்பான்மை பெற 36 இடங்களை வெல்ல வேண்டும். வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை காணுகையில், 41 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
கோவா நிலவரம்:
கோவாவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பாஜகவும், 12 தொகுதிகளில் காங்கிரசும், 2 தொகுயில் ஆம் ஆத்மியும், மற்ற கட்சிகள் 8 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
இந்நிலையில், கோவாவில் பெரும்பான்மை பெற 21 இடங்களை வெல்ல வேண்டும். வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை காணுகையில், 18 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
மணிப்பூர் நிலவரம்:
மணிப்பூர் மாநிலத்தில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 31 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சி 7 இடத்திலும், தேசிய மக்கள் கட்சி 10 இடங்களிலும் மற்றவை 12 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் ஆட்சியமைக்க 31 இடங்களை வெல்ல வேண்டும். வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை காணுகையில், 31 இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
இப்படி 4 மாநிலங்களிலும் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இடங்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் முன்னிலை வகித்து வரும் நிலையில், அம்மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது.
Related Tags :
Next Story