இந்தியாவில் மேலும் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு...!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,116 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் 22 மாதங்களுக்கு பிறகு நேற்று முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 3,600 ஆக சரிந்தது. பலி எண்ணிக்கையும் 100-க்குள் அடங்கி உள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து வீழ்ச்சிப்பாதையில் பயணித்து வருகிறது. நேற்று முன்தினம் தினசரி பாதிப்பு, 4 ஆயிரத்து 194 என பதிவானது. நேற்று இந்தப் பாதிப்பு, 3,614 ஆக சரிந்தது. இது 22 மாதங்களுக்கு (2020 மே 12) பிறகு இந்த அளவுக்கு தினசரி பாதிப்பு குறைந்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இந்நிலையில் இன்று புதிதாக 3,116 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3 ஆயிரத்து 116 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,29,90,991 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,15,850 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 5,559 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,24,37,072 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 38,069 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,80,13,23,547 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20,31,275 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனிடையே இந்தியாவில் கொரோனா பாதிப்பை கண்டறிய நேற்று ஒரே நாளில் 7,61,737 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை மொத்தம் 77,84,77,669 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story