சோனியா காந்தி தலைவராக நீடிக்க அனைவரும் ஒருமனதாக ஆதரவு: குலாம் நபி ஆசாத்
சோனியா காந்தி தலைவராக நீடிக்க அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளதாக குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார்.
புதுடெல்லி,
ஐந்து மாநில தேர்தல் தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர்கள் அடுத்தடுத்து நேற்று ஆலோசனை நடத்தினர். ஜி 23 என்ற அழைக்கப்படும் அதிருப்தி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் வீட்டில் நடைபெற்றது.
3 முறை இந்த கூட்டம் நடைபெற்ற நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை குலாம் நபி ஆசாத் இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் சோனியா காந்தியிடம், ஜி-23 குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டதாக கூறினார்.
மேலும் அவர், சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் பெறப்பட்டன. சோனியா காந்தியே தலைவர் பதவியில் நீடிக்க காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சோனியா காந்தியுடனான சந்திப்பு சிறப்பாக இருந்தது. அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் எதிர்கட்சிகளை தோற்கடிக்க ஒற்றுமையாக போராடுவது குறித்தும் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது என்று கூறினார்.
Related Tags :
Next Story