இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று குறைவு!


இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றை விட சற்று குறைவு!
x
தினத்தந்தி 29 March 2022 9:32 AM IST (Updated: 29 March 2022 9:32 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டது. 
அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,259 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. 

இது நேற்றைய பாதிப்பை விட சற்று குறைவு. நேற்றைய பாதிப்பு 1,270 ஆக இருந்த நிலையில் இன்று அந்த எண்ணிக்கை குறைந்தது.
  
இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,30,20,723 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 35 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5,21,070 ஆக உயர்ந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,705 பேர் குணமடைந்தனர். இதனால் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,85,534 ஆக உயர்ந்தது.

நாட்டில் தற்போது சிகிச்சை பெற்று வருவோர் மொத்த எண்ணிக்கை 15,378 ஆக குறைந்தது.

நேற்று ஒரே நாளில் 25,92,407 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதுவரை நாட்டில் மொத்தம் 183,53,90,499 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

Next Story