திருப்பதி அருகே 14 செம்மரக்கட்டைகள் பறிமுதல் - தப்பியோடிவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


திருப்பதி அருகே 14 செம்மரக்கட்டைகள் பறிமுதல் - தப்பியோடிவர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 2 April 2022 1:12 AM IST (Updated: 2 April 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

திருப்பதி அருகே 14 செம்மரக்கட்டைகளை வெட்டி சுமந்து சென்ற குழுவிடம் இருந்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

திருப்பதி,

திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸ் சூப்பிரண்டு மேதாசுந்தரராவ் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதர் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் ரெட்டி, சப்-இன்ஸ்ெபக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் திருப்பதி அருகே சேஷாசலம் வனப் பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

நேற்று காலை அன்னதம்முலபண்டா பகுதியில் ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி தோளில் தூக்கி வந்தனர். போலீசார் கும்பலை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர். ஆனால் கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். கும்பல் விட்டுச் சென்ற 14 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பியோடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதுகுறித்து செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story