லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 4 April 2022 12:06 AM IST (Updated: 4 April 2022 1:12 AM IST)
t-max-icont-min-icon

லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகளின் கூட்டாளிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஸ்ரீநகர், 

காஷ்மீரில் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களின் கூட்டாளிகள் 5 பேர் பிடிபட்டனர். ஹஜின், பந்திப்போரா ஆகிய இடங்களில் போலீசார் நடத்திய சோதனையை தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 3 கையெறி குண்டுகள் மற்றும் ஆபத்தான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story