கட்சியின் நிறுவன தினம்: பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு..!!


Image Courtesy: PTI
x
Image Courtesy: PTI
தினத்தந்தி 6 April 2022 4:07 AM IST (Updated: 6 April 2022 4:07 AM IST)
t-max-icont-min-icon

கட்சியின் நிறுவன தினத்தை முன்னிட்டு பா.ஜனதா எம்.பி.க்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார்.

புதுடெல்லி, 

பா.ஜனதா கட்சியின் நிறுவன தினம் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பா.ஜனதா எம்.பி.க்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்தார். 

அப்போது சமூகத்தின் பல்வேறு மட்டங்களில் உள்ள மக்களுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் வளர்ச்சி திட்டங்களை எடுத்துரைத்த பிரதமர் மோடி, இவற்றை மக்களிடம் எடுத்துச்செல்லுமாறு எம்.பி.க்களை கேட்டுக்கொண்டார். கட்சியின் நிறுவன தினத்தையொட்டி நாளை முதல் சமூக நீதிக்கான 15 நாட்கள் கடைப்பிடிக்கப்படுவதால் இந்த நாட்களில் மக்கள் சேவையில் ஈடுபடுமாறும் எம்.பி.க்களை பிரதமர் மோடி அறிவுறுத்தினார். 

இந்த கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டம், கொரோனா தடுப்பூசி திட்டம், ஆயுஷ்மான் பாரத், ஜன ஆஷாதி கேந்திரா உள்ளிட்ட திட்டங்களை பயனாளிகளுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளை எம்.பி.க்கள் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

Next Story